சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்க கடைகள் வாடகைக்கு பெறலாம்

விருதுநகர், ஜூன் 10:விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்படுகிறது.இதில் குழு உறுப்பினராக இருந்தால் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், முதியவர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பூமாலை வணிக வளாகத்தில் உணவு பொருட்கள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் விற்பனை செய்வோர், சிற்றுண்டி தயாரிப்பாளர்கள், சூடான மற்றும் குளிர்பானங்கள் விற்பனையாளர்கள், பலசரக்கு விற்பனை மற்றும் பியூட்டி பார்லர், பூ விற்பனை, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கம் உள்ளிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு கடை வாடகைக்கு விடப்படும்.

பெண்கள் குழுவாக பொருட்கள் உற்பத்தி செய்தால் விற்பனை செய்ய முன்னுரிமை வழங்கப்படும். தினசரி, மாதம் மற்றும் 6 மாத காலத்திற்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும். விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், பெண்கள் திட்ட இயக்குநர், ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்