சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு

சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னையில் நாளை காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு: * உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்திலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகியவற்றில் வாகன அனுமதி அட்டை பெற்றிருப்போர் தவிர மற்ற அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.* காமராஜர் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா  அண்ணாமலை மன்றம் சந்திப்பு மற்றும் வடக்கு கோட்டை பக்கசாலை வழியாக பாரிமுனை சென்றடையலாம்.* பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை, தலைமை செயலகம் வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பாரிமுனை சந்திப்பு, வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.* அண்ணா சாலையிலிருந்து கொடிமர சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனை சென்றடையலாம். முத்துசாமி பாலத்திலிருந்து கொடிமர சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம். * சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை வழியாக தலைமை செயலக உள் வாயிலின் அருகே இறங்கி, வாகனத்தை கோட்டை வளாகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த வேண்டும். * சிவப்பு மற்றும் பர்பிள் வண்ண வாகன அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, வாலாஜா முனை, கோட்டை ரயில் நிலைய சாலை, ஜார்ஜ் கேட்டின் வழியாக கோட்டையை அடைய வேண்டும். * நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணி வரை ராஜாஜி சாலை, போர்நினைவு சின்னம், கொடிமர சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று தலைமை செயலக வெளி வாயிலின் அருகே இறங்கி, வாகனங்களை தலைமை செயலகத்திற்கு எதிரில் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.* நீல மற்றும் பிங்க் வண்ண அனுமதி அட்டை வைத்திருப்போர் காலை 8.30 மணிக்கு பின்னர் காமராஜர் சாலை, உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக சென்று, தலைமை செயலகத்திற்கு எதிரில் உள்ள பொதுப்பணித்துறை நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை