சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கருத்து மக்கள் நலன் சார்ந்த முடிவு எடுக்குமிடம் நாடாளுமன்றம்

புதுடெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று தொலைக்காட்சியில் மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: பேரழிவு தரும் 2வது கொரோனாவில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை. இந்த முறை மக்கள் அதிக அக்கறை, எச்சரிக்கையுடன் பாதுகாத்து கொள்ள வேண்டும். புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதுடன், அவர்களது விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க உதவும். பண்டை காலங்களில் இந்த மண்ணில் ஜனநாயகத்தின் வேர்கள் வளர்க்கப்பட்டன என்பது நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டவர்களுக்கு தெரியாது. தற்போது கூட, தகுதி அடிப்படை அல்லாமல் அனைவருக்கும் உரிமை வழங்குவதில் வளர்ச்சி அடைந்த மேற்கத்திய நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியா நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, நாடாளுமன்றம் நமது ஜனநாயகத்தின் கோயிலாகும். இங்கு மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளைப் பற்றி விவாதித்து, முடிவு எடுக்கப்படுகிறது. நாடு தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஆண்டில், புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட இருப்பது பெருமை அளிக்கக் கூடிய அம்சமாகும். இவ்வாறு அவர் பேசினார்….

Related posts

தேர்வு எழுதும் மாணவர்களுடனான மோடியின் கலந்துரையாடல் மெய்நிகர் நிகழ்ச்சியாகிறது: நீட் விவகாரத்தால் மாற்றம்

மாநில கட்சிகளை அழிக்கும் பாஜதான் ஒரு ஒட்டுண்ணி: மோடிக்கு காங்கிரஸ் பதிலடி

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6ம் வகுப்பு புத்தகம் தயாரிப்பு பணி இன்னும் முடியவில்லை: கல்வி அமைச்சகம் தகவல்