சுதந்திர தினத்தையொட்டி 4 மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்ஆளுமை விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளுவர், திண்டுக்கல், சிவகங்கை, நெல்லை மாவட்ட ஆட்சியர்களுக்கு நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது. சென்னை காவல் ஆணையர், செங்கல்பட்டு மாவட்ட சமூக நல அலுவலருக்கு நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளருக்கும் நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டது. செங்கல் சூளை கொத்தடிமைகளை மீட்டு அவர்களே செங்கல் சூளை நடத்த வகை செய்த திருவள்ளூர் ஆட்சியருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருநங்கைகளின் அடிப்படை தேவையை நிறைவேற்றி வளர்ச்சிக்கு வழிவகுத்த சமூக நல அலுவலருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய ஆட்சியருக்கும் நல்ஆளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 12 முயற்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்:உண்ணி மரச்செடிகள் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரித்த நீலகிரி மாவட்டத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது. காணி ஒருங்கிணைந்த வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்துக்காக நெல்லை மாவட்டத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு பாராட்டுச் சான்றிதழ் இன்னுயிர் காப்போம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு பாராட்டுச் சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.  கருப்பை, கருமுட்டை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். சொந்த ஆதார வருவாயினை புவிசார் தகவல், ஆளில்லா விமான தொழில்நுட்பம் மூலம் அடிக்கப்படுத்திய சென்னை மாநகராட்சிக்கு பாராட்டு சான்றிதழ் அறிவிக்கப்பட்டுள்ளது.  …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்