சுதந்திர தினத்தையொட்டி அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை: ஆன்லைன் மூலமும் பெறலாம்

வேலூர், ஆக.8: சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள், அலுவலகங்களில் ஏற்றும் வகையில் அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய கொடி விற்பனை தொடங்கியுள்ளது. அதேபோல் அஞ்சலக ஆன்லைன் முகவரியிலும் தேசிய கொடியை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 77வது சுதந்திர தினம் வழக்கமான உற்சாகத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் ₹25 என்ற விலையில் நாட்டின் மூவர்ண தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.

எனவே, மத்திய, மாநில அரசின் அனைத்துத்துறை அலுவலகங்கள், பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் தேவைக்கு மொத்தமாகவும் அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடியை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் தனி நபர்களும் அஞ்சல் அலுவலகங்களில் தேசிய கொடியை பெற்றுக் கொள்ளலாம். தேசிய கொடிகளை அஞ்சல் அலுவலகங்களுக்கு செல்லாமல் தாங்கள் இருக்குமிடத்திலேயே பெற்றுக் கொள்ள https:/www.epostoffice.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து தேசிய கொடியை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி