சுதந்திரதினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுகிறார்: பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என அரசு அறிவுறுத்தல்

சென்னை: சுதந்திரதினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின். 15ம் தேதி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார். இதுகுறித்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய சுதந்திரதின திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை, தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் வருகிற 15ம் தேதி காலை 9 மணிக்கு தேசியக்கொடியினை ஏற்றி சிறப்பிப்பார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும் பங்கேற்பர்.கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி, ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில், இந்தாண்டு பொதுமக்கள், மாணவர்கள் பள்ளி குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவினை காண நேரில் வருவதை தவிர்க்க வேண்டும். சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் கண்டு மற்றும் கேட்டு மகிழவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு