சுண்டமேட்டில் சட்ட விழிப்புணர்வு முகாம்

 

திருப்பூர்: தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின்படியும், சட்ட உதவி இயக்க தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் விழுதுகள் தன்னார்வ அமைப்பு ஆகியவை சார்பில், திருப்பூர் சுண்டமேடு பகுதி மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் நீதிமன்ற வக்கீல்கள் அருணாச்சலம், உதய சூரியன், ராதா, கண்ணன், நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு நீதிமன்ற சட்ட உதவி மையம் குறித்தும், குழந்தைகள், பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், பொதுமக்களுக்கு அடிப்படை சட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழுதுகள் அமைப்பின் நிறுவனர் தங்கவேல் வாழ்த்தி பேசினார். முடிவில் திட்ட இயக்குனர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை