சுண்டக்காய் வத்த குழம்பு

செய்முறை:முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 3 நிமிடம் வதக்கி, பின் அதில் புளிச்சாறு சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 10-15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சீரகம், கடுகு மற்றும் சுண்டைக்காய் சேர்த்து தாளித்து, பின் இதனை குழம்புடன் சேர்த்து, மீண்டும் 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சுண்டைக்காய் வத்தக் குழம்பு ரெடி!!!…

Related posts

கேப்சிகம் மசாலா கிரேவி

பிரட் பால்ஸ்

ரவா தேங்காய்ப்பால் அல்வா