சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் பகுதியில் வாலிபரிடம் பணம், செல்போன் பறிக்க முயற்சி: ஒருவர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: தென்காசி மாவட்டம், வி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (24). இவர், ஆலந்தூரில் உள்ள டிராவல்ஸ் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த கீரநல்லூர் கிராமத்தில் உள்ள தனியார் கம்பெனியில் இயக்கப்படும் கார்களுக்கு சூப்பர்வைசர் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நிறுவனத்திற்கு வாகனத்தில் செல்வதற்காக, சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சங்கரலிங்கம் தனியாக நின்றுகொண்டிருந்தார். அப்போது சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ரேஸ் பைக்கில் வந்த 2 வாலிபர்கள், சங்கரலிங்கம் கையில் வைத்திருந்த ரூ 21 ஆயிரம் விலை உயர்ந்த செல்போனை வழிப்பறி செய்துள்ளனர். அப்போது, சுதாரித்துக் கொண்ட சங்கரலிங்கம் பின்னால் பைக்கில் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்து இழுத்துள்ளார். மேலும், அலறல் சத்தம் போடவே, இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதனைகண்ட மற்றொருவர் வந்த பைக்கை விட்டுவிட்டு தப்பித்து ஓடிவிட்டான். இது குறித்து சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கபட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.  இதில் சென்னை, திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த பிரதீப் (26) என்பதும், தப்பி ஓடியவன் கார்த்திக் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவரை தீவிரமாக விசாரணை செய்து தேடி வருகின்றனர்….

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் பாதிரியார் கைது

பெரம்பூர், வியாசர்பாடியில் வழிப்பறி செய்த 3 பேர் கைது