சுக்கு மல்லி காபி

செய்முறை: முதலில் வெறும் வாணலியில் சுக்கினை தனியே வறுத்து நசுக்கி வைக்கவும். பிறகு அதே வாணலியில் தனியா, மிளகு, சீரகம், கிராம்பு, ஏலம் எல்லாவற்றையும் வறுக்கவும். நசுக்கிய சுக்குடன் வறுத்த அனைத்தையும் சேர்த்து (நீர் விடாமல்) மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். தேவைப்படும் போது 1 கப் நீரினைக் கொதிக்க வைத்து அரைத்த பவுடரில் 2 ஸ்பூன் போட்டு நன்கு கொதித்ததும், வடிகட்டி கருப்பட்டி (அ) பனைவெல்லம் சேர்த்து பாலைச் சூடு செய்து அதில் சேர்த்துப் பருகவும். இந்த சுக்கு மல்லி காபி மருத்துவ குணங்கள் கொண்டது. மொத்தமாகப் பொடியினைத் தயார் செய்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்துக் கொண்டு தேவைப்படும் போது கொதிநீரில் சேர்த்து வடிகட்டி பால், வெல்லம் சேர்த்துப் பருகலாம். பால் இல்லாத சமயங்களில் பால் சேர்க்காமலும் பருகலாம்….

Related posts

கலாக்காய் ஜூஸ்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

அன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி