சுக்காம்பட்டி அரசு பள்ளியில் சேதமடைந்த கட்டிடம் அகற்றம்

குளித்தலை: தினகரன் செய்தி எதிரொலியால் சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு வருகிறது. குளித்தலை ஒன்றியம் இனுங்கூர் ஊராட்சியை சேர்ந்தது கீழ சுக்காம்பட்டி கிராமம். இப்பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியின் ஒரு வகுப்பறை கட்டிடம் சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்தகட்டிடத்தை அகற்றி புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி கடந்த 18ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியானது. இந்நிலையில் இதன் எதிரொலியாக இந்த கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதையடுத்து இது குறித்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த கல்வித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை