சுகாதார ஆய்வாளர் பாடிய ஒமிக்ரான் விழிப்புணர்வு பாடல்

ஆவடி: ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாபரின் ஒமிக்ரான் வைரஸ் பற்றி விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.  ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அப்துல் ஜாபர். இவர், மாநகராட்சி சுகாதாரப்பிரிவு சம்பந்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக்கழிவு மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு, கொரோனா வைரஸ் தடுப்பு, தடுப்பூசி போடுவது, 100% வாக்குப்பதிவு உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு பாடல்களை எழுதி சினிமா பட பாடல்களின் ராகத்தில் பாடி உள்ளார். இவரது பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அப்துல்ஜாபருக்கு தனியார் நிறுவனம் ஒன்று ‘உலக சாதனையாளர் விருது’ வழங்கி கவுரவித்தது. மேலும், அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் அவரது சமூக சேவையை பாராட்டி கேடயம், சான்றிதழ்களையும் வழங்கினர். இந்நிலையில், நேற்று முன்தினம் சுகாதார அலுவலர் அப்துல்ஜாபர் ஒமிக்ரான் வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு பாடலை எழுதி பாடியுள்ளார். இந்தப்பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரது விழிப்புணர்வு பணியை மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது….

Related posts

MY V3 ADS நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்ற காவல்!

டாஸ்மாக் காலி பாட்டில்களை பெறும் திட்டம் செப். முதல் அமல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்

மயிலாடுதுறையில் நாளை நாகப்பபடையாட்சியார் நினைவு நாள்: பொன்குமார் மரியாதை