சீர்மரபினருக்கு பொருளாதார வலுவூட்டலுக்கான திட்டம்

கிருஷ்ணகிரி, ஆக.6: சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்கள், பொருளாதார வலுவூட்டலுக்கான திட்டத்தில் பயன்பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம், சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு பொருளாதார வலுவூட்டலுக்கான திட்டம், மைய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் கல்விக்கான அதிகாரமளித்தல் (சீர்மரபினர்களுக்கு ஒன்றிய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு நல்ல தரமான பயிற்சி அளித்தல்), சுகாதாரம் (சீர்மரபினர்களுக்கு சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல்), வாழ்வாதாரங்களை எளிதாக்குதல், சமூக நிறுவனங்களின் சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த சமூக மட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான முயற்சியை எளிதாக்குதல். நிலம் மற்றும் வீடு (சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல்) ஆகிய நோக்கங்களை கொண்ட அடிப்படையாகக் கொண்டவையாகும்.

மேற்கண்ட திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் மைய அரசின் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண்.11ல் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி