சீர்காழி அருகே 1000 கோழி, 25 ஆடுகள் மழையால் உயிரிழப்பு

சீர்காழி: சீர்காழி அருகே மழைநீரால் 1000 கோழி, 25 ஆடுகள் உயிரிழந்தன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் பகுதியில் தொடர் மழையின் காரணமாக சுமார் 25க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து உள்ளன. மேலும் அந்த பகுதியில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தண்ணீர் வடியாமல் வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வடியாமல் தேங்கி நிற்கின்றன.இதன் காரணமாக விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் திருவெண்காடு பகுதியில் வசிக்கும் தக்ஷிணாமூர்த்தி என்பவர் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இந்த கோழிப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் கோழி வளர்ப்பு ஈடுபட்ட தக்ஷிணாமூர்த்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்….

Related posts

ஆர்ம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை விமானநிலையத்தில் இருந்து பெரம்பூர் புறப்பட்டார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி!

ஒசூரில் தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை!