சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா?

 

சீர்காழி, ஜூலை 24: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் சீர்காழி வட்டார பொது சுகாதாரத்துறை, வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி, காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை இணைந்து, வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் ராஜ்மோகன் தலைமையில்,

பேரூராட்சி செயல் அலுவலர் அசோகன், உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். விழிப்புணர்வு விளம்பர போர்டு இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், கருணாகரன் சுகாதார ஆய்வாளர்கள், பேருராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்