சீர்காழி அருகே ரூ.2 கோடிக்கு விற்பதற்காக சாமி சிலைகளை கருவறையில் பதுக்கிய கோயில் குருக்கள் கைது

கும்பகோணம்: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நெம்மேலி கிராமத்தை சேர்ந்த கோயில் குருக்கள் சூரியமூர்த்தி (75). இவரிடம் சில உலோக சிலைகள் மற்றும் வெள்ளிக்கவசங்கள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கூடுதல் எஸ்பி ராஜாராம் தலைமையில்  தனிப்படையினர் நேற்று முன்தினம் குருக்கள் சூரியமூர்த்தியை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அவர் கொடுத்த தகவலின்படி, நெம்மேலி கிராமத்தில் உள்ள விஸ்வநாதசுவாமி கோயில் கருவறையில் விசாலாட்சி அம்மன் சிலைக்கு பின்புறம் 32 செ.மீ உயரம் கொண்ட பிரதோஷ நாயகர் மற்றும் 30 செ.மீ உயரம் கொண்ட பிரதோஷ நாயகி சிலை (எடை 3 கிலோ 870 கிராம்) மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், குருக்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்த கணக்கில் வராத 1 காத்தாயி அம்மன், 1 சனீஸ்வரன் வெள்ளி கவசங்களையும், 2 சிறிய வெள்ளி குத்து விளக்கு, 1 சிறிய வெள்ளி குடம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இவை எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து குருக்கள் சூரியமூர்த்தியை போலீசார் நேற்று கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த பிரதோஷ நாயகர், பிரதோஷ நாயகி சிலைகளை ரூ.2 கோடிக்கு விற்க சூரியமூர்த்தி முயற்சித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது….

Related posts

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக போலி சான்றிதழ் தயாரித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நடிகர் பார்த்திபனிடம் ரூ.42 லட்சம் சுருட்டல்: கோவை ஸ்டூடியோ அதிபர் மீது வழக்கு

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் எனக்கூறி ரூ.75 லட்சம் மோசடி போலீஸ் ஏட்டு கைது