சீரகம் கிலோ ₹780க்கு விற்பனை மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு நல்லெண்ணெய் ₹450ஐ தொட்டது

நாகர்கோவில், அக்.6: குமரியில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துள்ளது. குமரியில் காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்திருந்த நிலையில், தற்ேபாது விலை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், முக்கிய மளிகை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சீரகம் இல்லாத சமையலே இல்லை என்ற நிலையில், அதன் விலை கிலோ a200லிருந்து கடந்த இரு மாதங்களில் படிப்படியாக உயர்ந்து, தற்போது கடைகள் மற்றும் தரத்தை பொறுத்து a700 முதல் a750 வரை விற்பனையாகி வருகிறது. பெருஞ்சீரகம் தரத்தை பொறுத்து a340 முதல் 390க்கு விற்பனையாகிறது. நல்ல மிளகு a680 முதல் a720 வரையிலும், a90க்கு விற்ற வெள்ளை கொண்டை கடலை தற்போது a200 ஆக உயர்ந்துள்ளது. நயம் பருப்பு விலை a180 முதல் a200 வரை விற்பனையாகிறது. சிறுபயறு a130க்கும், தொலி உளுந்து a130 முதல் a140 வரையிலும், கிராம்பு a900 முதல் a1050 வரையிலும், சுக்கு a420 ஆகவும் உயர்ந்துள்ளது.

பாசிப்பருப்பு a130 முதல் a140, வெள்ளை பூடு a170 முதல் a220க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏலக்காய் சிறியது a1700க்கும், பெரியது 2,200 முதல் 2,600 வரை உயர்ந்துள்ளது. நல்லெண்ணெய் கம்பெனியை பொறுத்து, ஒரு லிட்டர் பாக்கெட் a380 முதல் a450 வரை விற்பனை செய்யப்படுகிறது. கருப்பு கொண்டை கடலை, வெந்தயம், கடுகு, போன்றவை முந்தைய விலையான கிலோ a80க்கு விற்பனை செய்யப்படுகிறது. சரஸ்வதி பூஜை, விஜய தசமி, தீபாவளி என பண்டிகைகள் வரிசையாக வரும் நிலையில், முக்கிய பொருட்களான வெள்ளை கொண்டை கடலை மற்றும் பருப்பு வகைகள், சீரகம் போன்ற நறுமண மசாலா பொருட்கள், நல்லெண்ணெய் விலை உயர்ந்துள்ளது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து, வடசேரி மொத்த மற்றும் சில்லரை விற்பனையாளர் சுகர்னோ கூறியதாவது: மளிகை பொருட்கள் ஆன்லைன் என்ற ஊக சந்தையில் விற்பனைக்கு வந்த பின்னரே கடுமையாக விலை ஏறி வருகிறது. மொத்த ஸ்டாக்கிஸ்டுகளை ஒன்றிய, மாநில அரசுகள் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். விலை கூடினால், அது விவசாயிகளை சென்று சேர வேண்டும். ஆனால், இங்கு மக்களும், விவசாயிகளுமே விலை உயர்வால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

திருமண செலவு அதிகரிக்கும்
பண்டிகை கொண்டாட்டம் மட்டும் இன்றி, இவ்வாறு விலை ஏறினால், ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் திருமணம் நடத்துபவர்களின் பட்ஜெட்டும் எகிறும். குறிப்பாக 50 கிலோ எமரி பருப்பு வாங்கினால், அது மட்டுமே சமையல் பட்ஜெட்டில் a10 ஆயிரத்தை உயர்த்தி விடும். இதபோல், சீரகம், பெருஞ்சீரகம், நெய் என அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளதால், திருமண சமையல் பட்ஜெட்டில் a30 ஆயிரம் முதல் a50 ஆயிரம் வரை உயரும் நிலை உள்ளது.

Related posts

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலப்பணியை அதிகாரிகள் ஆய்வு

போதை மாத்திரை விற்ற ரவுடி மீது குண்டாஸ்

கர்நாடகா தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நிலுவையின்றி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை