சீனாவை துவம்சம் செய்யும் கனமழை!: நெடுஞ்சாலைகளை அடித்து சென்ற வெள்ளம்..நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மிதக்கின்றன..!!

பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்து பலத்த மழையால் சிட்டியா ஜுவாங் என்ற நகரமே வெள்ளத்தில் மிதக்கின்றது. அதேபோல் ஷான்ஸி மாகாணத்தில் உள்ள டாலி நகரத்தை வெள்ளப்பெருக்கு சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் அளவிலான விலை நிலங்கள் கண்ணுக்கு தெரியாத அளவில் மூழ்கி உள்ளன. வெள்ளம் நெடுஞ்சாலைகளை அடித்து சென்றுவிட்டதால் டாலி கவுண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் இதர பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் சுமார் 2 லட்சம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே சிட்டியா ஜுவாங் நகரத்தில் கரைபுரண்டோடிய நதியை கடக்க முயன்ற பேருந்தை வெள்ளம் அடித்து சென்றது. நீரில் தத்தளித்த 37 பேரை சுற்றுப்புற கிராம மக்கள் மீட்டனர். இருவர் உயிரிழந்துவிட்டனர். 12 பேரை காணவில்லை. தொடர் மழையால் பிங் யாங்கூ நகரத்தில் உள்ள உலக பாரம்பரிய சின்னமான சீன பெருஞ்சுவரின் ஒருபகுதி சேதமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …

Related posts

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி: 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது, கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார்

ஈரான் அதிபர் தேர்தலில் 2ம் சுற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பு

வரும் 12ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் நேபாள பிரதமர்