சீனாவில் ரூ.58 கோடி ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் சட்டத்துறை அமைச்சருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

பெய்ஜிங்: சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் பு ஜெங்குவாக்கு அந்தநாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பு ஜெங்குவா பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரியாகவும், பொது பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். சில நாட்கள் முன்பு வரை சட்ட அமைச்சராக அவர் பணியாற்றி வந்தார். சீனாவின் முக்கிய புள்ளியாக வளம் வந்த இவர் கடந்த ஆண்டு ஊழல் வழக்கில் சிக்கினார். இவர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 58 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் வாங்கினார் என்பது புகாராகும். இந்த வழக்கை ஜிலின் மாகாணத்தில் உள்ள மக்கள் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது தனது குற்றத்தை பு ஜெங்குவாஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்தார். என்றாலும் அவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரம் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் 2 ஆண்டுகள் சிறையில் வைக்கப்படுவார். சிறையில் நன்னடத்தை சான்று கிடைத்தால் அவரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படும்   …

Related posts

இஸ்ரேலுக்கு பக்க பலமாக நிற்போம் என அமெரிக்கா சூளுரை … இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் எச்சரிக்கை!!

“ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்” : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!