சீட் முடிவானது பின்னே… ஆளை அறிவிச்சாங்க முன்னே…! அதிமுகவை அடிச்சு தூக்கிய பாஜ

ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த நாடாளுமன்ற, இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜ, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக போட்டியிட்டன. தற்போதைய சட்டமன்ற தேர்தல் தொடர்பான அதிமுக  கூட்டணி பேச்சு வார்த்தையில் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டன. முதலில் கூட்டணிக்கு பாஜதான் தலைமை என அக்கட்சியினரும், நாங்கள்தான் தலைமை என அதிமுக கட்சியினரும் மாறி, மாறி ஆரம்பத்தில் இருந்தே முட்டி மோதி வந்தனர்.கூட்டணி பேச்சிலும் இழுபறி…: தேர்தலில் 60 தொகுதிகளில் பேச்சை தொடங்கிய, பாஜ கட்சிக்கு 20 போதுமென கொடுத்து ஆஃப் செய்து விட்டார் எடப்பாடி. இதனால் கூட்டணிக்குள் லேசான விரிசல் துவங்கி உள்ளது. கூட்டணி பேச்சு வார்த்தை  முடியாமலே அதிமுக நேற்று முன்தினம் ஓபிஎஸ் உட்பட 6 வேட்பாளர்களை அறிவித்தது. தாங்களே கூட்டணிக்கு தலைமை என்பதை சொல்லும்விதமாக முதலில் அறிவித்ததாகவும் பெருமை பேசிக்கொண்டது. ஆனால், பாஜ கட்சியினர்  ‘கணக்கை’ கடந்த மாதமே தொடங்கி விட்டனர்.கவுதமியே வேட்பாளர்…: கடந்த பிப்.26ம் தேதி விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பாஜ சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய, மேலிடத் தேர்தல் இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, “ராஜபாளையம்  சட்டமன்ற தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிடவுள்ள நடிகை கவுதமியை வெற்றி பெறச் செய்ய அனைவரும் பாடுபட வேண்டும்’’ என்றார். இது அதிமுகவினருக்கு மட்டுமல்ல… பாஜ கட்சியினருக்கே அதிர்ச்சியை தந்தது. அன்றுதான் தேர்தல்  தேதியே அறிவிக்கப்பட்டது. கடந்த முறை அதிமுக போட்டியிட்ட ராஜபாளையம் தொகுதியில், கூட்டணி பேச்சு வார்த்தை முடிவடையும் முன்னரே எப்படி வேட்பாளர் பெயரை அறிவிக்கலாம் என ஆளுங்கட்சியினர் பொங்கத் தொடங்கினர்.  தலைமை அறிவிக்காமல் பொறுப்பாளர் அறிவிக்கிறாரே என கேள்வி எழும்பிய நிலையில், தற்போது ராஜபாளையம் தொகுதியில் கவுதமியையே வேட்பாளராக அறிவிக்க உள்ளதாக தெரிவித்ததன் மூலம் அதிமுக தலைமைக்கே பாஜ ‘ஷாக்’  தந்துள்ளது. மேலும், இத்தொகுதியில் பாஜ சின்னத்தையும் ஏற்கனவே வரையத் தொடங்கி விட்டது….

Related posts

சொல்லிட்டாங்க…

புதிய குற்றவியல் திருத்த சட்டத்தில் இந்தி திணிப்பு; அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 4வது இடம்தான் என்பதால் அதிமுக போட்டியிடவில்லை: அழிவுக்கு ஜெயக்குமார்தான் காரணம்