Friday, October 4, 2024
Home » சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்

சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்

by kannappan

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு செல்போன் மூலம் இதுவரை 100 பேர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக சென்னை காவல் ஆணையரிடம் அவரது ஆதரவாளர் புகார் தொடுத்துள்ளார்.இதுகுறித்து அவரது வழக்கறிஞர் பாலமுருகன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:  ராஜ்ய சபா உறுப்பினர் சி.வி.சண்முகம், முன்னாள் சட்டத்துறை அமைச்சராகவும்,  விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினராக உள்ளார். சி.வி.சண்முகத்தின் அரசியல் செயல்பாட்டால் எரிச்சலடைந்தவர்கள், தொடர்ந்து, அவருக்கு தகாத வார்த்தைகளை பயன்படுத்தியும், கொலை மிரட்டல்கள் செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்தும் வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல்கள் ரவுடிகள் மற்றும் குண்டர்களிடம் இருந்து வந்துள்ளன. அதுதொடர்பாக ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரோசனை காவல் நிலையத்தில், புகார் கொடுத்தும்  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதற்கிடையில் நேற்று   முன்தினம் மதியம் 1.46 மணிக்கு வாட்ஸ்அப் மூலம், சி.வி.சண்முகத்துக்கு ஒரு குறிப்பிட்ட  எண்ணில் இருந்து மிரட்டல் வந்தது. அதில் தகாத வார்த்தைகளும் கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டு இருந்தது. உடனே, நான் காவல் கட்டுப்பட்டு அறை எண் 100க்கு தொடர்புகொண்டு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மேலும் ஏற்கனவே கொடுத்த புகாரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை, சி.வி.  சண்முகத்திற்கு எந்தவித போலீஸ் பாதுகாப்பும் வழங்காமல் அலட்சியப்போக்கை காவல் துறை கடைபிடித்து வருவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். எனவே  சி.வி.சண்முகத்திற்கு தகாத வார்த்தைகளினால் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுத்து தக்க பாதுகாப்பு வழங்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

1 + 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi