சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் உள்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

சென்னை: சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் உள்பட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநராக இருந்த வி.ராஜாராமன், சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த ஆனந்தகுமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையர் வள்ளலார், ஜவுளித்துறை ஆணையராகவும், நில நிர்வாக கூடுதல் கமிஷனராக இருந்த சாந்தா, நில சீர்திருத்த கூடுதல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் இருந்த ஜெயந்தி, நில நிர்வாக கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இணை செயலாளராக இருந்த நடராஜன், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக ஆணையராகவும்,  தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக இருந்த பிரகாஷ், கலை மற்றும் கலாச்சார ஆணையராகவும், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் சரண்யா ஆரி, பள்ளிக் கல்வித்துறை துணை செயலாளராகவும், மருத்துவ சேவைகள் தேர்வாணைய தலைவராக இருந்த ராஜசேகர், மாநில திட்டக் கமிஷன் உறுப்பினராகவும், அந்தப் பதவியில் இருந்த கிளாட்ஸ்டோன் புஸ்பராஜ், மருத்துவ சேவைகள் தேர்வாணைய தலைவராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆதார் திட்ட உதவி இயக்குநராக இருந்த பிரபாகர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநராகவும், சேலம் கூடுதல் கலெக்டராக இருந்த சேக் அப்துல் ரகுமான், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராகவும், ஜவ்வரிசி நிறுவன நிர்வாக இயக்குநர் பத்மஜா, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட தலைமை செயல் அதிகாரியாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பதவியை பல்லவி பல்தேவ் கூடுதலாக கவனித்து வந்தார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்