சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு

கந்தர்வகோட்டை, ஜூலை 4: கந்தர்வகோட்டை சிவாலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரில் அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் உள்ள நந்தீஸ்வரருக்கு பிரதோஷ தினத்தை முன்னிட்டு நேற்று எண்ணெய் காப்பு செய்து, புனி நீரால் நீராட்டி தண்ணீர் அபிஷேகமும், பால் அபிஷேகமும், தயிர் , பச்சரிசி மாவு , பஞ்சகாவ்யம், திருமஞ்சன பொடி , இளநீர் வாழைப்பழம், பலாப்பழம், தேன், பஞ்சாமிர்தம் , சந்தனம் திருநீறு , நல்லெண்ணெய் நெய் போன்ற 18 வகை அபிஷேகம் செய்து புதுபட்டு வஸ்திரம் நந்தி ஈஸ்வரருக்கு சாத்தி வண்ணமிகு வாசனை மலரும், அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பிரதோஷத்தை முன்னிட்டு கந்தர்வகோட்டை, அக்கட்சிபட்டி,மட்டாங்கால், சிவந்தான்பட்டி, காட்டு நாவல், துலுக்கன்பட்டி, சுத்தம்பட்டி, வளவம்பட்டிபிசானத்தூர், புதுநகர் போன்ற சுற்றுபுற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் குருக்கள் பாலு செய்து இருந்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை