சிவன்மலை ரவுண்டானாவில் மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி போலீசில் புகார்

 

காங்கயம், ஜன.13: காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை ரவுண்டான பகுதியில் மரங்களை வெட்டி சாய்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கயம் போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க., சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ஜவஹர் தலைமையில் காங்கயம் போலீசில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: காங்கயம் ஒன்றியம் சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட சிவன்மலை ரவுண்டானா அருகில் ஊராட்சியின் அங்கீகாரம் பெற்று மிகவும் அசுத்தமாக இருந்த இடத்தை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சுத்தம் செய்து அந்த இடத்தில் மரங்களும், அழங்கிய செடிகளை வைத்து சிறிய பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டது.

இதை அருகில் உள்ள கார் மட்டும் ஆட்டோ ஸ்டாண்ட் வைத்திருப்பவர்கள் பராமரித்து வந்தனர். மேலும் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் தேர்த்திருவிழாவிற்கு கடைகள் ஏலம் விடும்போதும், அந்த பூங்காவிற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் கடைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனையுடன் ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்களால் பூங்காவில் உள்ள மரங்கள் மற்றும் அழகிய செடிகள் ஆகியவற்றை வெட்டி வெட்டி உள்ளனர். இதில் அரசம்பாளையம் மின்வாரிய ஊழியர்கள் வெட்டியதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். மரத்தை வெட்டிய நபர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி