சிவகாசி மாநகராட்சியில் 84 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

சிவகாசி, ஜூன் 22: சிவகாசி மாநகராட்சியில் நேற்று 3வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றன. சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆலோசனையின் பேரில் நேற்று 3வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடைபெற்றது. நான்கு ரத விதிகள், காக்கா சண்முகம் ரோடு, அண்ணா காய்கறி மார்க்கெட் ரோடு, சிவன் கோயில் முன்பு என நேற்று ஒரே நாளில் 82 ஆக்கிரமிப்பு கடை அகற்றப்பட்டது.

மாநகராட்சி அதிகாரிகள் மதியழகன், திருப்பதி, பகவதி, சுரேஷ், பிரபு, சித்திக், சுந்தரவள்ளி, முத்துராஜ் ஆகியோர் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கிருந்து பொருட்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு