சிவகாசி பஸ் ஸ்டாண்டில் மூடிக்கிடக்கும் புதிய சுகாதார வளாகம்: பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை

 

சிவகாசி, ஜன. 29: சிவகாசி பஸ் ஸ்டாண்டில் மூடிக்கிடக்கும் புதிய சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகர் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்கிருந்து, சென்னை, மதுரை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் சிவகாசியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதனால் இந்த பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பயன்படுத்தி வந்த கழிப்பறை சேதமடைந்து இருந்ததால் அதனை அகற்றிவிட்டு புதிய நவீன சுகாதார வளாகம் குளியலறை வசதிகளுடன் கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 37 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நவீன சுகாதார வளாகம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயணிகள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

சுகாதார வளாகம் கட்டிடம் திறந்து 2 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் சுகாதார வளாகம் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.இதனால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அவதிப்படுகின்றனர். பஸ் ஸ்டாண்டில் உள்ள நுழைவு பகுதியை திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் அங்கு சுகாதார கேடு ஏற்படும் சூழல் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு புதிய சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு