சிவகாசி அருகே காவு வாங்க காத்திருக்கும் கிணறு: தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

 

சிவகாசி, அக்.11: சிவகாசி அருகே பள்ளபட்டி முத்துராமலிங்கபுரம் காலனியில் திறந்த வெளி கிணற்றால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிவகாசி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளபட்டி ஊராட்சியில் முத்துராமலிங்கபுரம் காலனியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் திறந்த வெளியுடன் கிணறு உள்ளது. தடுப்புச்சுவர் இல்லாத இந்த கிணறு குறித்து நீண்ட ஆண்டுகளாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இங்கு இரும்பு கம்பியுடன் கூடிய மூடி இல்லாததால் சிறு குழந்தைகள் விளையாடும் போது எட்டிப்பார்க்கின்றனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்றும் இரும்பு கம்பியுடன் கூடிய மூடி அமைக்க வேண்டும் என்றும் விபரீதம் நடப்பதற்கு முன்பே நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related posts

பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு

மணல் சிற்பத்தில் புதுவை; ஆயி மண்டபம், முதல்வர் முகம்

பெண்ணிடம் கந்துவட்டி கொடுமை வீட்டை பூட்டி வெளியேற்றிய அவலம்