சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் வாகனங்களை கண்காணிக்க அறிவுறுத்தல்

சிவகங்கை, மே 28: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் குழந்தை திருமணம், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புகார் பெட்டி வைத்தும் (கருத்து சுதந்திர பெட்டி),

அதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண் 04575-240166 மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 ஆகியவை எழுதி வைக்க வேண்டும். பள்ளியின் தலைமையாசிரியர்கள் தினசரி இறைவணக்க கூட்டத்தின் போது குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுரை வழங்க வேண்டும். தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அதிகமாக ஏற்றி செல்லும் வாகன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தீ தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை

குழாய் உடைப்பால் சாலையில் தேங்கிய குடிநீர்

சரக்கு வாகனம் மோதியதில் தொழிலாளி பலி