சிவகங்கை புறநகர் பகுதியிலிருந்து நகர் பகுதிக்கு செல்ல டவுன் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை, ஆக. 31: சிவகங்கை நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் செல்லும் வகையில் பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே பஸ் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கையில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகரையொட்டி அனைத்து பகுதிகளும் தற்போது விரிவாக்கமடைந்து வருகிறது. திருப்புத்தூர் சாலை, இளையான்குடி, மானாமதுரை சாலை, தொண்டி, சாலை, ஆயுதப்படை குடியிருப்பு வண்டவாசி சாலை என பல்வேறு பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. சிவகங்கையின் புறநகரில் இருந்து சுமார் 2 முதல் 5 கி.மீ தூரத்தில் உள்ள நகருக்குள் பல்வேறு தேவைகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வாணியங்குடி, அம்பேத்கர் சிலை, அரசு மன்னர் கல்லூரி, கோர்ட், கலெக்டர் அலுவலகம், ரயில்வே ஸ்டேசன், 48 காலனி, ஆயுதப்படை குடியிருப்பு, வண்டவாசி, இளையான்குடி சாலை, அண்ணாமலை நகர் என பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும் நகர்ப்பகுதியை இணைக்கும் வகையிலும் டவுன் பஸ்கள் இல்லை.

இப்பகுதிகளில் இருந்து வருபவர்கள் டூவீலர்கள், ஆட்டோக்கள் அல்லது காலை மாலை என எப்போதாவது அப்பகுதி வழியே வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ்களை நம்பியே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதுபோல் பஸ் ஸ்டாண்டிலிருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தனியாக பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வழியே வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ்களிலேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. நகரின் முக்கிய பகுதிகளை இணைத்து நாள் முழுவதும் இயங்கும் வகையில் டவுன் பஸ் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை