சிவகங்கை கல்லூரிக்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம்

 

சிவகங்கை, பிப்.5: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரிக்கு அரசு பள்ளி மாணவ,மாணவிகள் களப்பயணம் மேற்கொண்டனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர் கல்வி வழி காட்டுதல் அடிப்படையில் கல்லூரிகளுக்கு பள்ளி மாணவர்கள் களப்பயணமாக அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர். இதன்படி சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கலை கல்லூரிக்கு மலம்பட்டி, மறவமங்கலம், காளையார்கோவில், சாலைக்கிராமம், கீழடி, மாங்குடி, திருப்பாச்சேத்தி, அல்லிநகரம், திருப்புவனம், இடைக்காட்டூர், கட்டிக்குளம், கொல்லங்குடி, கொம்புக்காரனேந்தல், சிலுக்கபட்டி, மலையனூர், மானாமதுரை, அரசனூர், திருமாஞ்சோலை அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் வருகை தந்தனர்.

இரண்டு நாட்கள் வருகை தந்த சுமார் 300 மாணவ, மாணவிகளை நாட்டு நலப்பணி திட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் வரவேற்றனர். கல்லூரி சிறப்புகள், பாடப்பிரிவுகள் உள்ளிட்டவை குறித்து கல்லூரி முதல்வர் துரையரசன், துறைத்தலைவர்கள் அழகுச்சாமி, கலைச்செல்வி விளக்கம் அளித்தனர். மாணவ,மாணவிகள் வகுப்பறைகள், ஆய்வகம், நூலகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சிவா, மைக்கேல், ஆனந்த செல்வம், பொன்மலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு