சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணாரிருப்பு கண்மாய்க்கு வைகை தண்ணீர் விட கோரிக்கை

திருப்புவனம், டிச. 31: வைகை தண்ணீரை கண்ணாரிருப்பு கண்மாய்க்கும் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணாயிருப்பு கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீரினை பயன்படுத்தி உள்ளிட்ட சுமார் 300 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது இந்த கண்மாயில் மிக குறைந்த அளவே தண்ணீர் இருப்பதால் பயிர்களுக்கு பாதிக்கப்படுகிறது.

கடந்த வாரம் இந்த கிராமத்திற்கு அருகே திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள பாப்பாகுடி கண்மாய்க்கு கணக்கன்குடி கல்வாயிலிருந்து தண்ணீர் கொண்டு வந்தனர். தற்போது பாப்பாகுடி கண்மாய் பாதி அளவு நிறைந்துள்ளது. பாப்பாகுடி கண்மாயை நிரம்பிய பிறகு அதன் வழியாக கண்ணாரிருப்பு கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கண்ணாரிருப்பு விவசாயி ஜெகநாதன் கூறியதாவது: எங்களது பகுதியில் இந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யவில்லை.

இதனால் கண்மாயில் மடைக்கே வராத அளவிற்கு தண்ணீர் குறைவாக உள்ளது. இந்த கண்மாய் நீரை நம்பி விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வைகை நீர் பாப்பாகுடி கண்மாய்க்கு வருகிறது. அங்கிருந்து எங்களது கண்மாய்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கண்மாய்க்கு வரும் வரத்துக்கு கால்வாய் மேடாக உள்ளது. இதனை முறையாக தூர்வார நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Related posts

நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதியளித்த முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: மண்பாண்ட தொழிலாளர்கள், விவசாயிகள் பாராட்டு

மலைக்கோட்டை கோயிலுக்கு சொந்தமான ரூ.3.25 கோடி நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு

தொடர் டூவீலர் திருட்டு இருவர் மீது ‘குண்டாஸ்’ மாநகர போலீஸ் கமிஷனர் நடவடிக்கை