சிவகங்கை அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு!: 3,000 பேர் பங்கேற்பு…6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கோமாளிப்பட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 200 வாகனங்களில் இருந்து காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. கோமாளிப்பட்டி கண்மாய் திடலில் காளைகள் களமிறக்கப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு கோயில் திருவிழா மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஒரே இடத்தில் கூடுவதற்கு தடை விதித்து பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்நிலையில் மஞ்சுவிரட்டு போட்டியை காண சிவகங்கை, புதுப்பட்டி உட்பட சுற்றுவட்டாரங்களில் இருந்து சுமார் 3,000 பேர் வந்திருந்தது தெரியவந்தது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் ஏராளமான சரக்கு வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் மஞ்சுவிரட்டு காண வந்திருந்தனர். இதனையடுத்து அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்திய விழா கமிட்டியினர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகங்கை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்

சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் முதல்வர் நிதியுதவி