சிவகங்கையில் திமுக மகளிரணி சார்பில் குஷ்புவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, மார்ச் 14: மகளிருக்கு வழங்கப்படும் ரூ.ஆயிரம் உரிமைத்தொகை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த நடிகையும், பாஜவை சேர்ந்தவருமான குஷ்புவை கண்டித்து முழக்கம் எழுப்பி அவரது படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, தீயிட்டு கொளுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எம்எல்ஏ தமிழரசி தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் முன்னிலை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர்கள் மணிமுத்து, ஜோன்ஸ் ரூசோ, சிவகங்கை நகர் செயலாளர் துரைஆனந்த், திருப்புவனம் மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், சிவகங்கை ஒன்றியக் குழுத்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில், நிர்வாகிகள் மார்க்ரெட் கமலா, குழந்தைதெரசாள், பாக்கியலெட்சுமி விஜயகுமார், திலகவதி கண்ணன், திவ்யா, வளர்மதி, செல்வராணி, சுதா, தமிழ்செல்வி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்