சிவகங்கையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்: ரயில்வே அமைச்சரிடம் மனு

 

சிவகங்கை, அக்.11: மாவட்டத் தலைநகரான சிவகங்கையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை வழியே சென்று வந்த மன்னார்குடி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயில், செங்கோட்டை முதல் தாம்பரம் வரை செல்லும் ரயில் உள்ளிட்ட இவ்வழியே செல்லும் ரயில்கள் சிவகங்கை ரயில்வே ஸ்டேசனில் நிற்பதில்லை. பல்லவன் ரயில் காரைக்குடி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. பகல் நேரங்களில் சிவகங்கையில் இருந்து சென்னைக்கு ரயில் இல்லை.

இவ்வாறு மாவட்ட தலைநகரான சிவகங்கை ரயில்வே திட்டங்களில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்து செப்.23அன்று ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சிவகங்கை நகர்மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமையில் அனைத்துக் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் டெல்லியில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ராவ்சஹீப்பட்டீல் தானேவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மன், சிவகங்கை நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், துபாய்காந்தி, மகேஷ்குமார், விஜயகுமார், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் முத்துக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்