சில்லிபாயின்ட்…

* குஜராத்தில் நடைபெறும் 36வது தேசிய விளையாட்டு போட்டித் தொடரின் புள்ளிப் பட்டியலில் தமிழக அணி 67 பதக்கங்களுடன் (22 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம்) 5வது இடத்தில் உள்ளது. சர்வீசஸ் வாரியம் 113 பதக்கங்களுடன் (51 தங்கம், 33 வெள்ளி, 29 வெண்கலம்) தொடர்ந்து முதலிம் வகிக்கிறது. அரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா அடுத்த இடங்களில் உள்ளன.* கஜகஸ்தானில் நடந்த அஸ்தானா டென்னிஸ் தொடரின் பைனலில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸுடன் மோதிய செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று தனது 90வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.* பிபா யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்காக புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியம் அதிநவீன வசதிகளுடன் முழுவீச்சில் தயாராகி உள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் தொடக்க விழா மற்றும் 2 லீக் ஆட்டங்கள் இங்கு நாளை நடைபெற உள்ளன. இந்தியா, அமெரிக்கா, மொராக்கோ, பிரேசில் அணிகள் மோதும் ஏ பிரிவு லீக் ஆட்டங்கள் மற்றும் நைஜீரியா – சிலி மோதும் பி பிரிவு போட்டியும் இங்கு நடக்கிறது. மார்கோ (கோவா), நவி மும்பையிலும் போட்டிகள் நடைபெறும். * தேசிய விளையாட்டு போட்டியில் கேரள நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ் 6 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். தொடரின் சிறந்த வீரர் விருது சாஜனுக்கு கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது….

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா

தென் ஆப்ரிக்காவுடன் இன்று கடைசி டி20: தொடரை சமன் செய்ய இந்தியா முனைப்பு

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு