சிறை விதிகளில் திருத்தம் வேண்டும்: வெப்சைட்டில் பரிந்துரை வெளியிட உத்தரவு

மதுரை: தமிழக சிறைகளில் அலுவல் சாரா பார்வையாளர்களாக உரிய பயிற்சி பெற்றவர்களை நியமிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: அவ்வப்போது ஆய்வு செய்து, ஆலோசனை மற்றும் பயிற்சிகள் வழங்கிடும் வகையில் அனைத்து சிறைகளிலும் பார்வையாளர் குழுவை அமைக்க வேண்டும். அலுவல் சாரா பார்வையாளர் கூட்ட தீர்மானம், அரசுக்கான பரிந்துரைகளை மாவட்ட மற்றும் மாநில சிறை வெப்சைட்டில் வெளியிட வேண்டும். மாதிரி சிறை விதிகள் 2016 மற்றும் ஐநாவின் மண்டேலா விதிகளின்படி சிறை விதிகள் 1894 மற்றும் தமிழ்நாடு சிறை விதிகள் 1983ல் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். குழுவின் பரிந்துரை, நடவடிக்கை குறித்த ஆண்டறிக்கையை ஐஜி தரப்பில் தயாரித்து வெப்சைட்டில் வெளியிட வேண்டும். பார்வையாளர் முறை சிறப்பாக செயல்படும் வகையில் மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல்படி அனைத்து தரப்பினரையும் கொண்டு ஆண்டு மாநாட்டை அரசு தரப்பில் நடத்த வேண்டும்….

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை திடீர் சரிவு: கிலோ மல்லி ₹300 சாமந்தி ₹240க்கு விற்பனை

தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் அதிமுக ஆட்சியில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 63.22 லட்சம் உறுப்பினர்கள் அதிரடியாக நீக்கம்: விரைவில் தேர்தல் நடத்த முடிவு