சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் சசிகலா மீதான வழக்கை 25க்குள் முடிக்க வேண்டும்: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வரின் தோழியான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு சிறைவாசம் அனுபவித்து வந்த அவர், சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து பல்வேறு சொகுசு வசதிகளை பெற்று கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி  மாநில அரசிடம் ஒப்படைத்தனர்.மாநில அரசு இந்த வழக்கை ஊழல் தடுப்பு படைக்கு மாற்றியது. அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்  ஒருவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை ஜூலை 11ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கை ஏற்ற நீதிபதி சசிகலா மீது லஞ்ச ஒழிப்பு புகார் தொடர்பாக விசாரணை நடத்தி 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டுமென்று உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணையை துரிதப்படுத்திய லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரிகள் ஆங்காங்கே சோதனை நடத்தினர். சமீபத்தில்கூட பரப்பன அக்ரஹாரா சிறையில் பணியாற்றிய முன்னாள் எஸ்.பி கிருஷ்ண குமார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை ேநற்று உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சசிகலாவுக்கு எதிரான லஞ்ச புகார் குறித்து விசாரணை தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் சில மாதங்கள் கால அவகாசம் வழங்கவேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதற்கு மனுதாரர் கீதா மற்றும் உயர் நீதிமன்ற வக்கீல்கள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் கால தாமதம் ஏற்பட்டால் இந்த வழக்கை உடனே சி.பி.ஐக்கு மாற்றவேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அனைத்து தரப்பின் விசாரணையை ஏற்ற நீதிபதி, சசிகலாவுக்கு எதிரான லஞ்ச புகார் குறித்த குற்றப்பத்திரிக்கை குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்தே ஆகவேண்டும். இதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது.  25ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்று கூறிய நீதிபதி அன்றய தினத்திற்கே விசாரணையை ஒத்தி வைத்தார். …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது