சிறு, குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய புதிய மின்மோட்டார்: கலெக்டர் தகவல்

 

திருவள்ளூர், ஜூலை 1: திருவள்ளூர் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளின் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவிடும் வகையில் 125 விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்மோட்டார்களுக்கு பதிலாக, புதிய மின்மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.18.75 இலட்சம் மானியம் வழங்க நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்இணைப்பு பெற்றுள்ள, 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள், பழைய திறனற்ற மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பம் உள்ளவர்கள், புதிய ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு அமைத்து புதிய மின்மோட்டார் பம்பு செட்டு வாங்க விரும்புபவர்கள் பட்டா, சிட்டா அடங்கல், நிலவரைபடம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய விவரங்களுடன் அருகில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம்.

இத்திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் நுண்ணீர்பாசன அமைப்பினை நிறுவியிருக்க வேண்டும், இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மின்மோட்டார்களை வாங்க விவசாயிகளுக்கு ஜிஎஸ்டி தொகையையும் சேர்த்து ரூ.15 ஆயிரம் அல்லது மின்மோட்டார் பம்புசெட்டின் மொத்த விலையில் 50 சதவிகிதம் இவற்றில் எதுகுறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை