சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் தமிழகத்துக்கு முதலிடம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

சென்னை: மருத்துவத் துறைக்கு தேவையான பஞ்சுகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான ‘லியோ சர்ஜிகேர்’ நிறுவனத்தின் திறப்பு விழா நேற்று பல்லாவரம் அடுத்த நாகல்கேணியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு நிறுவனத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அளித்த பேட்டி:  முதல்வர் நீட்ஸ் என்னும் திட்டத்தில் பட்டதாரி இளைஞர்கள் மட்டுமே தொழில் தொடங்க கடனுதவி பெற முடியும் என்பதை மாற்றி, பிளஸ் 2 முடித்து இருந்தலே கடனுதவி பெற முடியும் என மாற்றியுள்ளார்.அதனால் படித்த இளைஞர்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோராக உருவாக முன்வர வேண்டும். தமிழக அரசு கடந்த 7 மாதத்தில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளது.இந்திய அளவில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி 3வது இடத்தில் இருந்த தமிழகம் இன்று முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. தொழில்முனைவோரின் பிரச்சனைகளையும் உடனுக்கு உடன் தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணநிதி, தமிழ்நாடு வியாபாரிகள் பேரமைப்பு நிறுவன தலைவர் விக்கரமராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்….

Related posts

ஆடி அமாவாசை, வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை, நாளை மறுநாள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் தகவல்

பிளேடால் நண்பரை கிழித்துவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு

நிலைய நுழைவு, வெளியேறும் பகுதியில் ஒருங்கிணைந்த நிலப்பரப்பு மேம்பாட்டுக்கு திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்: மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்