சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட கோரி கேரள அரசுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் கேரள அரசுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். சிறுவாணி குடிநீர்த் திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இத்திட்டப் பயனாளிகளுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.அதனை மீண்டும் வலியுறுத்தியும், உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்கள் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென்றும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மாண்புமிகு கேரள முதலமைச்சர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்….

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு