சிறுவர் இல்ல பணிக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு: அரசினர் சிறப்பு இல்ல சிறுவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் சேவை வழங்கும் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு,  சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்ல சிறுவர்களுக்கு ஆற்றுப்படுத்தல் சேவை வழங்க ஆற்றுப்படுத்தினர், உளவியலாளர் இரண்டு பணியிடங்களுக்கு (1  பெண் பணியிடம் உட்பட) ரூ.1000 என, (5 நாட்கள் மட்டும்) மாதம் ரூ.5000 என, மதிப்பூதிய அடிப்படையில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்கள், https://chengalpattu.nic.in என்ற இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் இதர சான்றிதழ்களின் ஒளி நகலுடன் கீழ்கண்ட முகவரிக்கு வருகின்ற 12.9.2022ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் விண்ணப்பத்தினை, கண்காணிப்பாளர், அரசினர் சிறப்பு இல்லம், (பழைய தாலுகா ஆபீஸ் அலுவலம் அருகில்) செங்கல்பட்டு  603002 முகவரிக்கும்,  044 – 2742 4458 என்ற தொலைபேசி எண்ணிலும் விவரங்கள் அறியலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு