சிறுவர்களுக்கு மூக்கு கண்ணாடி

தர்மபுரி, செப்.8: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், 10 இடங்களில் சிறுவர்- சிறுமிகள் மன்றங்கள் இயங்கி வருகிறது. இதில், மொத்தம் 280 மாணவ, மாணவிகள் உறுப்பினராக உள்ளனர். இவர்களுக்கு காவல்துறை மூலமாக ஆங்கில மொழித்திறன் பயிற்சி மற்றும் ஓவியம், விளையாட்டு, கற்பித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில், நான்கு சிறுவர்களுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. எஸ்பி ஸ்டீபன் ஜேசு பாதம் பங்கேற்று, சிறுவர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்