சிறுமுகையில் ஸ்ரீ கிருஷ்ணா நாட்டியாலயா பள்ளியில் 13ம் ஆண்டு விழா

 

மேட்டுப்பாளையம், மே.3: ஸ்ரீ கிருஷ்ணா நாட்டியாலயா பள்ளியில் 13ம் ஆண்டு விழா சிறுமுகை தனியார் மகாலில் நடைபெற்றது. இதில் குரு பிருந்தாகுமாரி தலைமை தாங்கி வரவேற்று பேசினார். டாக்டர் ரேணுகாதேவி மனோகரன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். ஆடிட்டர் மருதாசல மூர்த்தி, மகேஷ் குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வரவேற்றனர். விழாவில் கல்லார் அகஸ்தியர் ஞானபீடம் சரோஜினி மாதாஜி, மருத்துவர் டாக்டர் சசித்ரா தாமோதரன், சிறுமுகை தனியார் பள்ளி முதல்வர் வெங்கடேசன், ஸ்கார்க் பவுண்டேஷன் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.

நாட்டிய நிகழ்ச்சியில் ஐந்து வயது முதல் 20 வயது வரை உள்ள 42 மாணவிகள் கலந்து கொண்டு ஆதிசங்கரர் வகுத்து கொடுத்த ஆறு சமயங்களான சௌரம் சூரிய (வழிபாடு), காணாதி பதியம் (விநாயகர் வழிபாடு), கௌமாரம் (முருக வழிபாடு), சைவம் (சிவ வழிபாடு), வைணவம் (பெருமாள் வழிபாடு), சாக்தம் (சக்தி வழிபாடு) உள்ளிட்ட வழிபாடுகளில் நடனம் ஆடினர். குரு பிருந்தா குமாரி நட்டுவாங்கம் செய்ய, சுவாதிகா வாய்ப்பாட்டு பாட சென்னனூர் குப்புராஜ் மிருதங்கம் வாசிக்க சிறுமுகை சேகர் முகர்சங்குடன், மதுவந்தியின் வயலின் இசையுடன் நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நாட்டிய ஆசிரியை பிருந்தா குமாரிக்கு தனியார் அறக்கட்டளை நிறுவனர் கவிதா மருதாசலமூர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தினார். அருணா விஜயகுமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் சுவாதிகா நன்றி கூறினார்.

Related posts

தூத்துக்குடியில் புரோட்டா மாஸ்டர் மாயம்\

வியாபாரியை மிரட்டியவருக்கு வலை

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சருக்கு பாஜவினர் வரவேற்பு