சிறுமுகையில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு சந்தன மரத்தை வெட்டி கடத்தியபோது காட்டுயானை தாக்கி முதியவர் பலி

மேட்டுப்பாளையம் : சிறுமுகை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட காப்புக் காட்டில் ராமர் (60) என்பவர் கடந்த 23ம் தேதி காலை காட்டு யானை தாக்கி இறந்தார். இது குறித்து கருப்புசாமி என்பவர் சிறுமுகை போலீசில் புகார் செய்தார். அவர்கள்  சிறுமுகை வனச்சரக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் புகார் தெரிவித்த கருப்புசாமியை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு சென்றனர். கூத்தாமுண்டி தூம்புபள்ளம்  என்ற இடத்திற்கு சென்று பார்த்தபோது  அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் இருப்பது கண்டுபிடித்தனர். கருப்பசாமியிடம் விசாரணை நடத்தியதில், தான் மற்றும் கரட்டுமேட்டை சேர்ந்த ராஜ்குமார், ஸ்ரீரங்கன்ஓடையை சேர்ந்த ராமர் கடந்த 21ம் தேதி கோத்தகிரி கரிக்கையூர் அருகிலுள்ள பங்களா குழி எனும் இடத்தில் தனியார் எஸ்டேட்டில் திருட்டுத்தனமாக 4 கிலோ சந்தன மரங்களை வெட்டி வந்தோம்.   23ம் தேதி காலை சுமார் 9 மணியளவில் மேற்கண்ட சம்பவ இடத்திற்கு வந்தபோது எதிர்பாராதவிதமாக காட்டு யானை ராமரை (60)  தாக்கியதால் அவர் பலியானார் என்று கூறினார். 2 நாட்களாக இது குறித்த தகவலை வெளியே கூறாமல் தற்போது சிறுமுகை காவல் நிலையத்திற்கு வந்து தகவல் கூறி உள்ளார். இது தொடர்பாக போலீசார் மற்றும் வனத்துறை இணைந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு