சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 27 ஆண்டு சிறை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே உள்ள கோம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் மதியழகன். இவரது மகன் சரண்ராஜ்(24). இவர், கடந்த 2021 பிப்ரவரி 1ம்தேதி 15வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சரண்ராஜை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார்,  சரண்ராஜூக்கு 27 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்….

Related posts

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!

ஈரோடு அருகே கைத்தறி சேலை விற்பனை கடையில் 25 சவரன் நகை கொள்ளை!!