சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு

திருவாடானை, மே 30: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும், தொண்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த உறவினர் மணி (24) என்பவருக்கும் கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாகவே, தடுப்பூசி போடுவதற்காக தொண்டியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள செவிலியர், சிறுமியின் ஆதார் அட்டையில் வயதை சரிபார்த்த ேபாது மைனர் பெண் என்பது தெரிந்தது.

இத்தகவல் ராமநாதபுரம் சமூக நலத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தி சிறுமியை திருவாடானை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரில் போலீசார் சிறுமியை திருமணம் செய்ததாக மணி, திருமணம் செய்து வைத்த அவரது தந்தை பன்னீர், தாயார் செல்வி, மற்றும் சிறுமியின் தந்தை, தாய் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு