சிறுகாவேரிபாக்கம் ஊராட்சியில் ரூ.26 லட்சத்தில் சாலை பணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் ஊராட்சியில் ரூ.26 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் ஊராட்சிக்குப்பட்ட பத்மாவதி நகர், சௌபாக்கியா நகர், மாரியம்மன் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.26 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், சிறுகாவேரிபாக்கம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்