சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை; சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

சென்னை: சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை  என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தமிழகத்தில் அதிகரித்து வருகிறது ஆகவே அதை ஊக்கப்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிபதி கூறினார். சாலை விபத்தில் இழப்பீடு கோரி இரு சக்கர வாகனத்தை ஓட்டிய சிறுவன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போக்குவரத்து விதிகளை மீறி, 18 வயதிற்கு குறைவான சிறுவர் – சிறுமியர் வாகனங்கள் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என போலீசார் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம், 1988, பிரிவு 4ன் படி 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் – சிறுமியர், இரு சக்கர வாகனம் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. சிறுவர் – சிறுமியரை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். வாகனங்கள் வேறு நபர்களுக்கு சொந்தமாக இருந்தால் அவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கூறியிருந்தது. இதுபோன்ற செயலில் ஈடுபடும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். மூன்று மாதம் சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே இன்று நடந்த விசாரணையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிறார்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்