சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: பாரதியாரின் 100-வது நாள் நினைவு நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி அடிக்கடி பாரதியின் பாடல்களை மேற்கோள் காட்டி உரையாற்றுவது வழக்கம். இதனிடையே மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் பாரதியாரின் நினைவு தினமான இன்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்;  ”சிறப்பு வாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்” என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். …

Related posts

காஷ்மீரில் 2ம் கட்ட தேர்தல்; 26 தொகுதிகளில் 56% வாக்குப்பதிவு: அமைதியாக நடந்தது

அமலாக்கத்துறையால் ஓராண்டுக்கு முன் கைது; செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு திருப்பதியில் ஜெகன் வழிபாடு: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அறிவிப்பு