சிறப்பு டிஜிபி மீதான மேல்முறையீட்டு வழக்கு 22ம் தேதிக்கு ஒத்திவைப்பு விழுப்புரம் கோர்ட் உத்தரவு

விழுப்புரம், ஜன. 20: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறைதண்டனை, ரூ.20,500 அபராதமும், புகார் கொடுக்க சென்ற பெண் எஸ்பியை தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பிக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை
குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து இருவரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீடு மனுதாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இந்த வழக்கை வேறுமாவட்டத்திற்கு மாற்றக்கோரி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் வரும் 24ம் தேதிக்குள் வழக்கை முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி நேற்று நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராகவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளதாக அவரது தரப்பு வக்கீல் கூறினார். இதனைக் கேட்ட நீதிபதி பூர்ணிமா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை 24ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளதால் வரும் 22ம் தேதி சிறப்பு டிஜிபி தரப்பு தங்கள் வாதத்தை தெரிவிக்க வேண்டும் என்று கூறி அன்றைய தினத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை